கோலாலம்பூர்: கொவிட்19 உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரி கலந்து கொண்ட அமைச்சரவைக்கு பிந்தைய கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருன் வீட்டில் தனிமைப்படுத்தலின் கீழ் இருப்பதாகக் கூறினார்.
கொவிட்19 நோய்த்தொற்றுக்கு அவர் எதிர்மறையான முடிவு பெற்றதாகவும், ஆனால் இன்னும் இரண்டு வாரங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மலேசியாகினியிடம் கூறியதாக அது குறிப்பிட்டிருந்தது.
“நான் இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். எனது முடிவுகள் எதிர்மறையானவை. ஆனால், நெருங்கிய தொடர்பில் இருந்ததால், சட்டம் 342- இன் 15- வது பிரிவின் கீழ் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டேன்” என்று அவர் இன்று ஒரு வாட்சாப் செய்தியில் தெரிவித்தார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உயர் அதிகாரிகள், சட்டத்துறை அலுவலக அதிகாரிகள் மற்றும் தேசிய தணிக்கைத் துறை ஆகியோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொவிட்19 பாதிப்புக்கு உண்டான அந்த அதிகாரி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.