Home One Line P2 ஓ.பன்னீர் செல்வம் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி

ஓ.பன்னீர் செல்வம் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி

737
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று திங்கட்கிழமை (மே 25) காலையில் இங்குள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ எனப்படும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுவதாக ஊடகங்கள் தெரிவித்தன.

ஒருவருக்கு இருதயப் பகுதிகளில் கொழுப்பு அடைப்பு இருக்கிறதா, அப்படி இருந்தால் எந்த அளவுக்கு இரத்த நாளங்களில் கொழுப்பு அடைப்பு இருக்கிறது என்பதை நிர்ணயிக்க நடத்தப்படும் பரிசோதனைதான் ஆஞ்சியோ என்பதாகும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்று சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

இன்று மாலையே ஓ.பன்னீர் செல்வம் பரிசோதனைகள் முடிந்து இல்லம் திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.