Home One Line P1 ஜோகூர் அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்தவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனை

ஜோகூர் அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்தவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனை

798
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: மே 22 அன்று பாசீர் பெலாங்கி அரண்மனையில் அத்துமீறி நுழைய முற்பட்டதன் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் தங்கும்விடுதி ஊழியருக்கு இன்று புதன்கிழமை கீழ்நிலை நீதிமன்றம் ஐந்து மாத சிறைத்தண்டனை விதித்தது.

35 வயதான ஜூயல் ஹுரானுக்கு இன்று தண்டனை விதிக்க நீதிபதி லீ ஜுன் கியோங் உத்தரவிட்டார்.

தனது தீர்ப்பில், லீ இந்த குற்றத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டதாகவும், இது அரச குடும்பத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

குற்றப்பத்திரிகையின்படி, மே 22-ஆம் தேதி காலை 9.22 மணியளவில் ஜூயல் எந்தவொரு நுழைவு அட்டை அல்லது அனுமதி இல்லாமல் அரண்மனைக்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தடைசெய்யப்பட்ட பகுதி சட்டம் 1959 (சட்டம் 298) இன் பிரிவு 5 (1)- இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, அதே சட்டத்தின் 7- வது பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டார். இது அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 1,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.