எனினும் இன்று மரணங்கள் ஏதும் நிகழவில்லை. கடந்த இரண்டு நாட்களாக மூன்று குடிநுழைவு முகாம்களில் பாதிப்பு எண்ணிக்கை மூன்று இலக்கு எண்ணை அடைந்தது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 15 பாதிப்புகளில் 6 பாதிப்புகள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்கள். மீதமுள்ள ஒன்பது பேரில் நால்வர் வெளிநாட்டினர்.
இன்று 42 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,083-ஆக உயர்ந்தது.
1,421 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் எண்மர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில், நால்வருக்கு சுவாசக் கருவி தேவைப்படுகிறது.