Home One Line P1 வெளிநாட்டினரை கையாள்வதில் அரசு மனிதாபிமானமற்று நடப்பதாகக் கூறப்படுவதற்கு சப்ரி யாகோப் மறுப்பு

வெளிநாட்டினரை கையாள்வதில் அரசு மனிதாபிமானமற்று நடப்பதாகக் கூறப்படுவதற்கு சப்ரி யாகோப் மறுப்பு

645
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சில தரப்பினரால் கூறப்படும் வகையில், கொவிட்-19 பாதித்ததை அடுத்து நாடு வெளிநாட்டு தொழிலாளர்களைக் கையாள்வதில் மலேசிய அரசாங்கம் மனிதாபிமானமற்ற நிலையில் செயல்படுகிறதென்ற கூற்றை தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மறுத்தார்.

இந்த விவகாரத்தில் அரசாங்கம் மனிதாபிமானமற்றது என்று குற்றம் சாட்டியவர்கள், இரண்டு வகை வெளிநாட்டு தொழிலாளர்கள் இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அனுமதி பெற்றவர்கள் மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர்கள் என்று அவர் கூறினார்.

“இந்த அனுமதி பெற்றவர்கள் கட்டுமானம், தோட்டம் அல்லது துப்புரவு துறைகளில் தேவைப்படுகிறார்கள், மேலும் சொக்சோ மற்றும் அனைத்துலக தொழிலாளர் சட்டத்திற்கு இணங்க பங்களிப்பு செய்கிறார்கள்.” என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் குறுக்குவழித்தடங்கள் வழியாக நாட்டிற்குள் நுழைவது உள்ளிட்ட, வேலை ஆவணங்கள் இன்றி நாட்டின் சட்டங்களை மீறியதற்காக அவர்களை சிறப்பாக நடத்த முடியாது, தவிர பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையும்.

ஆனால், முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது வெளிநாட்டினரை ஆக்கிரமித்து கைது செய்வதில், அரசாங்கம் மனிதாபிமானமற்றது என்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அவர் கூறினார்.