Home One Line P1 பினாங்கு அனைத்துலக விமான நிலைய விரிவாக்கத் திட்டம் ஒத்திவைக்கப்படலாம்

பினாங்கு அனைத்துலக விமான நிலைய விரிவாக்கத் திட்டம் ஒத்திவைக்கப்படலாம்

724
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: கொவிட்-19 தொற்றுநோய் பரவுவதால் ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்ட பினாங்கு அனைத்துலக விமான நிலைய விரிவாக்க திட்டம் ஒத்திவைக்கப்படலாம்.

மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் இந்த திட்டத்தின் நிலை குறித்து தொடர்புடைய தரப்புகளிடமிருந்து மேலதிக அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருப்பதாக முதல்வர் சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.

பினாங்கு தீவு நகர மன்றம் அனுமதிக் கொடுத்திருந்தாலும், திட்டத்தைத் தொடங்க நேரம் பொருத்தமானதல்ல, ஏனெனில் கொவிட்-19 தொற்றுநோய் தொடர்ந்தால், விமான நிலையம் உகந்ததாக பயன்படுத்தப்படாது.

#TamilSchoolmychoice

“விமான நிலைய விரிவாக்கம் நன்மை பயக்கிறதா இல்லையா என்பதை நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும். இப்போதிலிருந்து ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை இந்த விஷயத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படலாம் என்று மாநில அரசுக்கு அறிவிக்கப்பட்டது, ” என்று அவர் நேற்று இரவு தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.