ஜோர்ஜ் டவுன்: பினாங்கு அரசாங்கம் அடுத்த மாநில சட்டமன்றக் கூட்டத்தில் இரண்டு பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்களின் இடங்களை காலியாக இருப்பதை அறிவிக்க ஒரு தீர்மானத்தை முன்வைக்கும்.
பினாங்கு அரசியலமைப்பின் பிரிவு 14ஏ-இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில நம்பிக்கைக் கூட்டணி தலைவரான முதலமைச்சர் சௌ கோன் இயோ கூறினார்.
இரண்டு பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் – சுல்கிப்ளி முகமட் லாசிம் (தெலுக் பாஹாங்) மற்றும் காலிக் மெஹ்தாப் முகமட் இஷாக் (பெர்தாம்) முறையே மாரா கார்ப் ஆலோசகராகவும், பினாங்கு பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அப்பதவிகளை ஏற்றுக்கொண்டதன் வாயிலாக தேசியக் கூட்டணிக்கு அவர்கள் ஆதரவு அளித்திருக்கின்றனர்.
இருவரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று மாநில அரசியலமைப்பு கூறியுள்ளது, இது தோல்வியுற்றால், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் இந்த விலகல் நடைமுறை செய்யப்படலாம் என்று சௌ கூறினார்.
“பிரேரணையை பெரும்பான்மையினர் ஆதரித்தால், சபாநாயகர் இரு இடங்களையும் காலியாக அறிவிக்க முடியும்.” என்று அவர் நேற்று பினாங்கு ஜசெக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
புதன்கிழமை நடந்த நம்பிக்கைக் கூட்டணி குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சௌ கூறினார்.