Home One Line P1 ஜசெக மீது அவதூறு பரப்பியது தொடர்பில் முகநூல் பயனர் மீது காவல் துறையில் புகார்

ஜசெக மீது அவதூறு பரப்பியது தொடர்பில் முகநூல் பயனர் மீது காவல் துறையில் புகார்

539
0
SHARE
Ad
படம்: ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் சீர்லீனா அப்துல் ராஷிட்

ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் ஜசெக மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், கட்சியை அவதூறாகப் பேசியது தொடர்பில், முகநூல் பயனருக்கு எதிராக காவல் துறையில் புகார் அறிக்கையை பதிவு செய்துள்ளார்.

ஜாலான் பட்டாணி காவல் நிலையத்தில் அறிக்கை அளித்த ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் சீர்லீனா அப்துல் ராஷிட், அப்பயனர் கட்சி குறித்து தவறான இடுகையை செய்துள்ளதாகவும், அதை ஜசெக வலைப்பக்கத்துடன் இணைத்ததாகவும் கூறினார்.

“இது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக இப்போது மலேசியா கொவிட்19 தொற்றுநோயைக் கையாளுகிறது. அதே நேரத்தில் அரசியல் மற்றும் இனரீதியான பதட்டங்களைத் தூண்டுவதற்கு இவர்கள் முயற்சிக்கிறார்கள்,” என்று அவர் இங்கே செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

“அவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.