வாஷிங்டன்: உலக சுகாதார நிறுவனம் உடனான உறவை அமெரிக்கா நிறுத்துவதாக அதன் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
“இன்று நாம் உலக சுகாதார நிறுவனத்தின் உடனான உறவை முடிவுக்குக் கொண்டு வருவோம். பொது சுகாதார உதவி தேவைப்படும் உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுக்கு நிதி விநியோகிப்போம். ” என்று டிரம்ப் வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முன்னதாக மே மாதத்தில், டிரம்ப் உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் ஆகியோருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். அனைத்துலக அமைப்பு 30 நாட்களுக்குள் முன்னேற்றத்திற்கான செய்தியை உறுதியளிக்காவிட்டால், நிரந்தரமாக நிதியைக் குறைப்பதாகவும், உறுப்பியத்தை மறுபரிசீலனை செய்வதாகவும் அச்சுறுத்தியிருந்தார்.
ஏப்ரல் நடுப்பகுதியில் டிரம்ப் தனது நிர்வாகம் உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியளிப்பதைக் குறைப்பதாக அறிவித்தது. பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்நிலையில் உலகம் முழுவதும் கடுமையான விமர்சனங்களை இது பெற்றுள்ளது.
அமெரிக்காவில் மட்டும், 1.7 மில்லியனுக்கும் அதிகமானகொவிட்19 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. 102,000- க்கும் அதிகமான இறப்புகள் அங்கு பதிவாகியுள்ளது.