Home One Line P1 இரண்டு முன்னாள் சரவாக் பிகேஆர் தலைவர்கள் பெர்சாத்து சரவாக் கட்சியில் இணைந்தனர்

இரண்டு முன்னாள் சரவாக் பிகேஆர் தலைவர்கள் பெர்சாத்து சரவாக் கட்சியில் இணைந்தனர்

663
0
SHARE
Ad

கூச்சிங்: இரண்டு முன்னாள் சரவாக் பிகேஆர் உயர் தலைவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் இன்று சனிக்கிழமை பெர்சாத்து சரவாக் கட்சியில் (PSB) இணைந்தனர்.

செலாங்காவ் நாடாளுமன்ற உறுப்பினர் பாரு பியான் மற்றும் பத்து லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் சீ ஹவ் ஆகியோர் கூச்சிங்கில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் முறையாக அக்கட்சியில் சேர்ந்தனர்.

பிப்ரவரி இறுதி வரை, பாரு பியான் சரவாக் பிகேஆர் தலைவராகவும், சீ சரவாக் பிகேஆர் துணைத் தலைவராகவும் இருந்தனர்.

#TamilSchoolmychoice

பெர்சாத்து சரவாக் கட்சி கூச்சிங்கை தளமாகக் கொண்ட எதிர்க்கட்சியாகும். இது வோங் சூன் கோ தலைமையில் உள்ளது. அவர் சரவாக் மக்கள் கட்சியில் (SUPP) ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து இந்த கட்சியை உருவாக்கினார்.

2016 மாநிலத் தேர்தலில், பிகேஆர் மூன்று மாநில சட்டமன்ற இடங்களை வென்றது.

பிப்ரவரி மற்றும் பிற்பகுதியில் பாரு பியான் மற்றும் அலி பிஜு (கிரியான்) பிகேஆர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சீ கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.