Home One Line P2 ஜோர்ஜ் பிளாய்ட்க்கு ஆதரவாக வெடித்த போராட்டம் காரணமாக, மினியாபோலிஸில் ஊரடங்கு உத்தரவு

ஜோர்ஜ் பிளாய்ட்க்கு ஆதரவாக வெடித்த போராட்டம் காரணமாக, மினியாபோலிஸில் ஊரடங்கு உத்தரவு

540
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்காவின் மினியாபோலிஸ் மாநிலத்தில் கறுப்பின நபர் ஒருவர் காவல் துறையின் தடுப்புக் காவலில் இருந்தபோது மோசமாக நடத்தப்பட்டதால் மரணமடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா எங்கும் வீதிக் கலவரங்கள் வெடித்துள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கி ஊரடங்கு உத்தரவை மினியாபோலிஸ் மாநகராட்சி மன்றத் தலைவர் ஜேக்கப் பிரே அறிவித்தார்.

அமெரிக்காவின் பெரிய நகரமான மினசோட்டாவில் நகரத்தில் ஜோர்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பின நபருக்கு எதிராக, காவல் துறை அதிகாரிகள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில் உயிர் இழந்ததை அடுத்து, மூன்று தொடர்ச்சியான இரவுகளில் எதிர்ப்புக்கள் மற்றும் வன்முறைகள் அப்பகுதியில் அதிகரித்து வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்த உத்தரவை மீறுவது தவறான செயலாகும். அவ்வாறு நடந்து கொண்டால் 1,000 அமெரிக்க டாலர் அபராதம் அல்லது 90 நாட்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அனைத்து சட்ட அமலாக்க, தீயணைப்பு மற்றும் மருத்துவ பணியாளர்களும், மினியாபோலிஸ் நகரம், செயின்ட் பால் நகரம், மினசோட்டா பொது பாதுகாப்புத் துறை, மினசோட்டா மாநில ரோந்து அல்லது மினசோட்டா தேசிய காவலர் ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்ட பிற பணியாளர்களும் ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். ” என்று பிரே கூறினார்.

46 வயதான பிளாய்ட் திங்கட்கிழமை மாலை மரணமுற்றார். அவரைக் கைது செய்த காவல் துறை அதிகாரி டெரெக் என்பவர் அவரது கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டார். இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது. பிளாய்ட் தம்மால் சுவாசிக்க முடியவில்லை என்று கூறுவது அக்காணொளியில் பதிவாகி உள்ளது.

பிளாய்டின் மரணத்தைத் தொடர்ந்து தேசிய சீற்றத்திற்கு மத்தியில் டெரெக் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில் நாடு முழுவதும் வெடித்துள்ள கலவரங்கள் வெள்ளை மாளிகைக்கும் வெளியேயும் இடம் பெயர்ந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை முழு அடைப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது.