Home One Line P1 சனிக்கிழமை வரை புதிய கொவிட்-19 பாதிப்புகள் 30: மரணம் ஏதுமில்லை

சனிக்கிழமை வரை புதிய கொவிட்-19 பாதிப்புகள் 30: மரணம் ஏதுமில்லை

684
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – மலேசியாவில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் வரையில், 24 மணி நேரத்தில் கொவிட்-19 புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 30 ஆக குறைந்த அளவிலேயே பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட் 19 பாதிப்புகள் எண்ணிக்கை 7,762 ஆக உயர்ந்தது.

இந்தத் தகவல்களை வெளியிட்ட சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம், புதிதாக அடையாளம் காணப்பட்ட 30 பாதிப்புகளில் 3 பேர் வெளிநாட்டில் இருந்து அந்தத் தொற்றுகளால் பீடிக்கப்பட்டவர்கள் என்றும் 27 பேர் உள்நாட்டில் தொற்று பீடிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

உள்நாட்டில் பீடிக்கப்பட்ட 27 தொற்றுகளில் 17 வெளிநாட்டுக்காரர்களிடம் அடையாளம் காணப்பட்டதாகும். எஞ்சிய 10 பேர் மட்டுமே மலேசியர்களாவர்.

இதில் 112 பாதிப்புகள் மூன்று குடிநுழைவு முகாம்களில் அடையாளம் காணப்பட்டன.

தொடர்ந்து எட்டாவது நாளாக மரணங்கள் ஏதும் நிகழவில்லை. மரண எண்ணிக்கை 115-ஆக தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

நேற்று சனிக்கிழமை வரையில் 95 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து 6,330 பேர் இதுவரையில் குணமடைந்திருக்கின்றனர்.

தற்போது நாடெங்கிலும் 1,317 பேர் மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிரக் கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் மட்டுமே சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சைகள் பெற்று வருகின்றனர்.