Home One Line P1 சைட் சாதிக் இனி பெர்சாத்து பெயரை பயன்படுத்தக்கூடாது!- வான் பைசால்

சைட் சாதிக் இனி பெர்சாத்து பெயரை பயன்படுத்தக்கூடாது!- வான் பைசால்

482
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சைட் சாதிக்கிற்கு, பெர்சாத்து தலைவராக இருந்து பேசவோ, பெர்சாத்து பெயரைப் பயன்படுத்தவோ உரிமை இல்லை, ஏனெனில் அவரது உறுப்பியம் இரத்து செய்யப்பட்டுள்ளது என்று வான் அகமட் பைசால் வான் அகமட் கமால் தெரிவித்துள்ளார்.

அர்மடா பெர்சாத்து மலேசியா என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை (மே 31) சைட் சாதிக் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியதாக துணை இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.

கட்சியின் தொடக்கத் தேர்தலில் அர்மடா தலைவர் பதவியில், சைட் சாதிக்கின் முன்னாள் உதவியாளரான வான் பைசால் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

“சைட் சாதிக் அவர் தேர்ந்தெடுக்கும் வேறு எந்த பதிவு செய்யப்பட்ட தரப்பு சார்பாக பேச உரிமை உள்ளது.

“இருப்பினும், அர்மடா அல்லது பெர்சாத்து என்ற பெயரை எந்தவொரு நோக்கத்திற்காகவும் பயன்படுத்த அவருக்கு உரிமை இல்லை. குறிப்பாக கட்சி விஷயங்களில் தலையிடுவதற்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தூண்டுவதற்கும் அவர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்கிறார்.” என்று வான் பைசால் திங்களன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னாள் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட நான்கு முன்னாள் உறுப்பினர்களுடன் சைட் சாதிக் கட்சிக்கு எதிராக செயல்பட்டதற்காக தானாகவே அவர்களது உறுப்பியம் நிறுத்தப்பட்டதாக பெர்சாத்து பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் விரிவாக விளக்கினார் என்று வான் பைசால் மீண்டும் வலியுறுத்தினார்.

“எனவே, சைட் சாதிக் இனி அர்மடா தலைவராக இல்லை.” என்று அவர் மேலும் கூறினார்.