Home One Line P1 விரைவில் நாடாளுமன்ற அமர்வு நடத்தப்பட வேண்டும்!- அன்வார்

விரைவில் நாடாளுமன்ற அமர்வு நடத்தப்பட வேண்டும்!- அன்வார்

531
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் விரைவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒன்றை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மையில் மக்களவை அமர்வின் போது, நாடாளுமன்ற விவாதம் நடைபெறாதது அரசாங்க அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கான ஓர் அனுமதியாக போய் விட்டதாக அவர் கூறினார்.

இது சில “தகுதியற்ற” நபர்களை தேசிய கூட்டணி அரசாங்கத்தால் நியமிக்க காரணமாக அமைந்தது என்று பிகேஆர் தலைவருமான அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“ஆயிரக்கணக்கானவர்கள் வேலையின்றி இருக்கும் இந்நேரத்தில் தகுதியற்றவர்களை பதவியில், பணியில் அமர்த்துவது..”

“இவை அனைத்தும் சீர்தூக்கிப் பார்க்கும் நிலை ஏற்படாது. ஆலோசனை இல்லை, கண்டிப்பதில்லை.” என்று அன்வார் ஒரு பேட்டியில் கூறினார்.

எந்த பெயர்களையும் குறிப்பிடவில்லை என்றாலும், அரசு மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் அரசியல்வாதிகள் நியமிக்கப்படுவதை அன்வார் குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது.

அரசாங்க நிறுவனங்களில் முக்கியமான பதவிகளை வகிக்க ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சில அரசியல்வாதிகள் நீதிமன்றத்தில் இன்னமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.