சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 408 புதிய கொவிட்19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் மொத்தமாக 35,292 சம்பவங்கள் இதுவரையிலும் பதிவாகி உள்ளன.
புதிய சம்பவங்கள் அனைத்தும் வெளிநாட்டினர் தங்குமிடங்களில் வசிப்பவர்கள் சம்பந்தப்பட்டதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட முழு தரவுகளின்படி, கொவிட்19 தொற்றின் இலேசான அல்லது மருத்துவ ரீதியாக குறிப்பிடத்தக்க அறிகுறிகளைக் கொண்ட 12,841 நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிட்டிருந்தது.
சுமார் 321 சம்பவங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. எட்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர். இருவரையிலும் அங்கு 23 பேர் மரணமுற்றுள்ளனர்.