Home One Line P1 இரவுச் சந்தை நடவடிக்கைகள் சனிக்கிழமை முடிவு செய்யப்படும்

இரவுச் சந்தை நடவடிக்கைகள் சனிக்கிழமை முடிவு செய்யப்படும்

666
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முடிதிருத்தும் கடை, அழகு நிலையம் மற்றும் மசூதியில் தொழுகைகள் ஆகியவற்றுடன், இரவுச் சந்தை நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுமா இல்லையா என்பது வரும் சனிக்கிழமை முடிவு செய்யப்படும்.

தேசியப் பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சகம் ஒப்புதல் வழங்கப்படுவதற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை அவை மதிப்பாய்வு செய்யும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரித்தார்.

“முடிதிருத்தும் கடைகள், அழகு நிலையம் மற்றும் இரவுச் சந்தைகளுக்கான நடைமுறை இந்த சனிக்கிழமை தெரிவிக்கப்படும்.

#TamilSchoolmychoice

“மசூதியில் தொழுகைகளுக்கான அனுமதி கேட்கும் முன்மொழிவு உள்ளது.

“இருப்பினும், இதை சனிக்கிழமையன்று மத விவகாரங்கள் தொடர்பான அமைச்சருக்கு சமர்ப்பிப்போம்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.