Home One Line P1 அரசியல் போராட்டம் தொடர்ந்தால் மாநிலத் தேர்தலை நடத்துவேன் – ஜோகூர் சுல்தான்

அரசியல் போராட்டம் தொடர்ந்தால் மாநிலத் தேர்தலை நடத்துவேன் – ஜோகூர் சுல்தான்

1036
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: மாநிலத்தில் அதிகாரப் போராட்டம் தொடர்ந்தால், மாநிலத் தேர்தலை நடத்த அனுமதிக்க மாநில சட்டமன்றத்தைக்  கலைப்பேன் என்று சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்காண்டார் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலத்தை குழப்பத்தில் விட்டுச்செல்ல விடமாட்டாரென்று அவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடையே அதிகாரப் போராட்டம் இருந்தால், நான் உடனடியாக ஜோகூர் மாநில சட்டமன்றத்தைக் கலைப்பேன்.

#TamilSchoolmychoice

“ஜோகூர் மக்களுக்கு அவர்களின் புதிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை நான் தருவேன். இந்நேரத்தில் கட்சி அல்லது தங்களுக்காக அல்லாமல், மக்களுக்கும், அரசிற்கும் சேவை செய்ய விரும்பும் தலைவர்களைத் தேர்ந்தெடுங்கள்.” என்று அவர் கூறினார்.

ஜோகூர் அரசியலமைப்பின் 23-வது பிரிவு, மாநில சட்டமன்றத்தை தொடங்கவும் இடைநீக்கம் செய்யவும் அவருக்கு அதிகாரம் உள்ளது என்று கூறுகிறது, ஆனால், அது ஆலோசனையின் பேரில் மட்டுமே சாத்தியம்.

இதேபோல், 23 (2)- வது பிரிவு, மாநில சட்டமன்றம் இன்னும் முடிவடையவில்லை என்றாலும், ஆலோசனையின் பேரிலும், இடையில் கலைக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது என்றும், 7 (1)- வது பிரிவுக்கு அது உட்பட்டது என்றும் கூறுகிறது.

மாநிலத்தில் நடந்து வரும் அரசியல் கொந்தளிப்பு குறித்து தனது விரக்தியை வெளிப்படுத்திய அவர், சக்தியற்ற தலைவர்கள் இருப்பதாகவும், சுயநலத்திற்காக தொடர்ந்து பதவியேற்கிறார்கள் என்றும் கூறினார்.

“தற்போதைய நெருக்கடி நிலையில், மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. மக்களின் துன்பங்களை மேலும் அதிகரிக்க தயாராக உள்ளனர்.

“என் மக்கள் துன்பப்படுவதை என்னால் பார்க்க முடியாது, என் மாநிலத்தை சீர்குலைக்க நான் விடமாட்டேன்.

“எனது மக்கள் மற்றும் எனது நாட்டின் தலைவிதியை எல்லா நேரங்களிலும் பாதுகாப்பதற்கு நான் சபதம் செய்துள்ளேன்” என்று அவர் கூறினார்.