Home அரசியல் மீண்டும் ஒரு ‘ஆபாச’ காணொளி – பாஸ் தலைவர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளாரா?

மீண்டும் ஒரு ‘ஆபாச’ காணொளி – பாஸ் தலைவர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளாரா?

856
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 12 – பாஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர், விடுதி அறை ஒன்றில் அடையாளம் தெரியாத மாது ஒருவருடன் தகாத உறவு கொள்வது போல் உள்ள காணொளி நேற்று ‘யூ டியூப்’ என்ற சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு, தற்போது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த காணொளியில், பாஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரைப் போல் தோற்றமளிக்கும் நபர், மாது ஒருவருடன் உறவு கொள்வதைப் போலவும், பிறகு ஆடை அணிந்து கொள்வது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

இது குறித்து, அம்னோ சார்பு வலைப்பதிவரான பபகொமோ கூறுகையில், பாஸ் தலைவருடன் உறவு கொள்ளும் அந்த மாதுவுக்கு பிகேஆர் பணம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பபகொமோ ஏற்கனவே எதிர்கட்சித் தலைவர் அன்வார் பற்றிய சர்ச்சைக்குரிய காணொளியை தனது வலைத்தளத்தில் வெளியிட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காணொளி பற்றிய செய்தி மக்களிடையே பரவி வருவதால், இன்று காலையே ‘யூ டியூப்’ தனது வலைத்தளத்திலிருந்து சம்பந்தப்பட்ட காணொளியை அகற்றிவிட்டது.

அந்த காணொளி போலியானதுபாஸ் உதவித் தலைவர் கருத்துhusam-musa5-nov3

அந்த சர்ச்சைக்குரிய காணொளி குறித்து இன்று காலை புத்திர ஜெயாவில் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஸ் கட்சியின் உதவித் தலைவர் ஹூசாம் மூசா (படம்) கூறுகையில்,

“தேர்தல் நெருங்குவதால் இது போன்ற காணொளிகளை வெளியிட்டு, மக்கள் கூட்டணியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த அம்னோ கட்சியினர் முயன்று வருகின்றனர்.

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தகாத உறவில் ஈடுபடுவதைப் போல் ஒரு போலியான காணொளியை சமீபத்தில் வெளியிட்டனர்.

தற்போது பாஸ் தலைவர் ஒருவரை சம்பந்தப்படுத்தியுள்ளனர். எனவே இது போன்ற போலியான காணொளிகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.