Home One Line P2 கொவிட்19: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9,000-க்கும் மேலான தொற்று பதிவு

கொவிட்19: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9,000-க்கும் மேலான தொற்று பதிவு

619
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் கொவிட்19 பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 216,919- ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 9,034 பேர் இந்த தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 260-ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, 106,737 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 104,107 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 6,075- ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்தியாவில் அதிகமகாப் பாதிக்கபட்ட மாநிலமாக தொடர்ந்து மகாராஷ்டிரா இருந்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 2,560 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.