Home One Line P1 53 விழுக்காடு கட்டுமான தளங்கள், அரசாங்கம் நிர்ணயித்த நடைமுறைகளுக்கு இணங்கி செயல்படுகின்றன

53 விழுக்காடு கட்டுமான தளங்கள், அரசாங்கம் நிர்ணயித்த நடைமுறைகளுக்கு இணங்கி செயல்படுகின்றன

506
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவின் கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம் (CIDB) நேற்று சோதனை செய்த 191 கட்டுமானத் தளங்களில் 53 விழுக்காடு கட்டுமானத் தளங்கள், கொவிட் -19 தடுப்புக்காக அரசாங்கம் நிர்ணயித்த நடைமுறைகளுக்கு இணங்குவதாக கண்டறியப்பட்டது.

101 கட்டுமான தளங்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இணங்கி உள்ளதாகவும், அவற்றுக்கு இணங்காத ஏழு கட்டுமான தளங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

“இதற்கிடையில், இரண்டு கட்டுமான தளங்கள் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக்கு இணங்காததால் மூட உத்தரவிடப்பட்டன. மீதமுள்ள 81 கட்டுமான தளங்கள் செயல்படவில்லை.” என்று அவர் இன்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இன்றுவரை, சிஐடிபியால் 6,750 கட்டுமான தளங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் 1,312 கட்டுமானத் தளங்கள் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக்கு இணக்கமாக இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 295 தளங்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளன.

12 கட்டுமானத் தளங்கள் இதுவரை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், 5,131 கட்டுமானத் தளங்கள் செயல்படத் தொடங்கவில்லை என்றும் அவர் கூறினார்.