Home One Line P2 கொவிட்19: இந்தியாவில் கோயில்களில் பிரசாதம் வழங்கப்படுவதற்கு தடை!

கொவிட்19: இந்தியாவில் கோயில்களில் பிரசாதம் வழங்கப்படுவதற்கு தடை!

537
0
SHARE
Ad

புது டில்லி: இம்மாதம் 8-ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வணிக வளாகங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் மத வழிபாட்டுத்தலங்களுக்கான புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

“முந்தியடித்துக் கொண்டு செல்லுவதை வழிபாட்டுத்தலங்களில் தவிர்க்க வேண்டும். கோயில்களில் பிரசாதங்கள் வழங்கப்படக்கூடாது. குங்குமம் போன்றவற்றை கைகளால் வழங்குவதும், புனித நீரை தெளிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. ” என்று அது தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் பாடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட இசையை வேண்டுமானால் ஒலிக்க செய்யலாம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழையும் முன்னர் பொதுமக்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அது கூறியது.

கோயில்களில் உள்ள சிலைகள் உள்ளிட்ட சின்னங்களை தொடுவதற்கு அனுமதி கிடையாது. பெரிய அளவிலான கூட்டங்கள் நடத்துவதைவும் தவிர்க்க வேண்டும் என்று அது கேட்டுக் கொண்டது.