Home One Line P1 ‘நான் பதவி விலகவில்லை, விலகப்போவதுமில்லை’- ரெட்சுவான் யூசோப்

‘நான் பதவி விலகவில்லை, விலகப்போவதுமில்லை’- ரெட்சுவான் யூசோப்

494
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் முகமட் ரெட்சுவான் முகமட் யூசோப் இன்று பதவி விலகலை அறிவிப்பார் என்ற ஊகத்தை மறுத்தார்.

இன்று காஜாங்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய முகமட் ரெட்சுவான், ஊகங்களை பரப்புவதன் மூலம் நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை பாதிக்கச் செய்ய விரும்பும் சில குழுக்கள் இருப்பதாக தாம் நம்புவதாக விளக்கினார்.

“நான் பதவி விலகவில்லை, மறுபடியும் சொல்கிறேன் நான் பதவி விலகமாட்டேன்.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நாட்டை வலுப்படுத்த பிரதமர் மொகிதின் யாசின் அமைச்சரவையில் தொடர்ந்து பணியாற்றுவேன் என்பதையும் அலோர் காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

துன் மகாதீரை பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கும் முடிவை மொகிதின் யாசின் தரப்பினர் எடுத்ததைத் தொடர்ந்து கட்சியின் எல்லா மட்டங்களிலும் பிளவுகள் ஏற்பட்டு வருகின்றன.

பொதுப் பணித் துறை துணை அமைச்சர் ஷாருடின் சாலே பதவி விலகியதாக நேற்று வியாழக்கிழமை (ஜூன் 4) அறிவித்தார். பதவி விலகியவுடன் துன் மகாதீரைச் சந்தித்தார் ஷாருடின் சாலே. முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை சந்தித்தது குறித்த புகைப்படத்தினை, மகாதீர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனால், தேசிய கூட்டணி தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பெரும்பான்மையுடன் உள்ளது.

முன்னதாக, தனது பதவி விலகல் குறித்து பரலாகி வந்த செய்தியில், ஷாருடின், தேசிய கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான தனது முடிவு சரியானதல்ல என்று உணர்ந்ததைத் தொடர்ந்து பதவி விலகியதாகவும், அதை சரிசெய்ய விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.

எனினும் ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினரான ஷஹாருடின் சாலே தொடர்ந்து  தேசிய கூட்டணிக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்திருப்பதாக பெர்னாமா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருப்பதும் பலருக்கு குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையில், ஷாருடின் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்திருப்பதாக  பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப் உறுதிப்படுத்தினார்.