Home One Line P1 புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் மொகிதின் யாசினுக்கு ஆதரவு

புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் மொகிதின் யாசினுக்கு ஆதரவு

583
0
SHARE
Ad
புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் அபு ஹூசேன் பெர்சாத்துவில் இணைகிறார்.

கோலாலம்பூர் – பேராக் மாநிலத்தின் புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் அபு ஹூசேன் பின் ஹாபிஸ் சைட் அப்துல் பசால், பிரதமர் மொகிதின் யாசின் தலைமையை ஏற்று பெர்சாத்து கட்சியில் இணைவதாக அறிவித்திருக்கின்றார்.

2018 பொதுத்தேர்தலில் பத்து கந்தாங் தொகுதியில் அம்னோ-தேசிய முன்னணி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சைட் அபு ஹூசேன் அதன்பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டுக் கொண்டிருந்தார். துன் மகாதீரின் தலைமைத்துவத்திற்கும் ஆதரவு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது பெர்சாத்து கட்சியில் இணைவதாக அவர் அறிவித்திருக்கிறார். தான் பெர்சாத்துவில் இணைவதற்கான உறுப்பினர் பாரத்தையும் சமர்ப்பித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மொகிதின் யாசின், துன் மகாதீர் இருவருக்கும் இடையில் தலைமைத்துவப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் சைட் அபு ஹூசேன் பெர்சாத்துவில் இணைவது, மொகிதின்-அஸ்மின் கூட்டணிக்குக் கிடைத்த இன்னொரு வெற்றியாகும்.

மீண்டும் ஆட்சியில் அமர்வேன், மொகிதின் யாசினை வீழ்த்துவேன் என்ற சூளுரையுடன் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றார் துன் மகாதீர். தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் அவரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றனர்.

அன்வார் இப்ராகிம் மட்டும் இதுவரையில் மகாதீரோடு சந்திப்பு நடத்தவில்லை.

மலேசிய அரசியலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓர் அணியில் இருந்து இன்னொரு அணிக்கு இது போன்று தாவுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றது.

மொகிதினுக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுதிக் கடிதம் வழங்குகிறார் சரவாக் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூகா

முன்பெல்லாம் எப்போதோ ஒருமுறைதான் இப்படி நடக்கும். இன்றைய சூழ்நிலையில் தினமும் அணி மாறுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

ஏற்கனவே சரவாக் மாநிலத்தின் லுபோங் அந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜூகா பிகேஆர் கட்சியிலிருந்து விலகி பிரதமர் யாசின் தேசியக் கூட்டணிக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் இன்னொரு கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவு, புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினரின் வடிவில் மொகிதினுக்குக் கிடைத்திருப்பது அவரது பலத்தை நாடாளுமன்றத்தில் கூட்டி இருக்கின்றது.