Home One Line P1 உள்நாட்டு விமான நுழைவுச் சீட்டு விலை அதிகரிப்பு – பேச்சுவார்த்தை நடத்தப்படும்

உள்நாட்டு விமான நுழைவுச் சீட்டு விலை அதிகரிப்பு – பேச்சுவார்த்தை நடத்தப்படும்

653
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உள்நாட்டிலேயே பயணிக்கும் விமான நுழைவுச் சீட்டுகளின் விலையில் உயர்வு குறித்து போக்குவரத்து அமைச்சு கூடிய விரைவில் விமான நிறுவனங்களுடன் ஒரு பேச்சுவார்த்தையை நடத்தும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

“கூடல் இடைவேளி அமல்படுத்தப்பட்டதிலிருந்து அதிகமான பயணிகள் விமானங்களில் பயணிக்க முடியாத காரணத்தினால், விமான நுழைவுச் சீட்டுகளின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அறிகிறோம். கூடல் இடைவெளி காரணமாக 66 விழுக்காடு மட்டுமே விமானத்தின் இருக்கைகள் பயன்படுத்தப்படுகிறது.”

“எடுத்துக்காட்டாக மிரியிலிருந்து கோலாலம்பூருக்கு செல்லும் விமான நுழைவுச் சீட்டு விலை 2,000 ஆயிரம் ரிங்கிட் அதிகரித்துள்ளதை மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற விலை அதிகரிப்பு எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.” என்று அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அண்மையில் விமான நுழைவுச் சீட்டு விலை அதிகரிப்பு குறித்து பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்ததாக பெர்னாமா தெரிவித்திருந்தது.

மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வருகிற புதன்கிழமை அமலுக்கு வர இருக்கும் நிலையில், இந்த விலை அதிகரிப்பு மக்களுக்கு சுமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, தீபகற்பத்திலிருந்து, சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு இது சுமையை ஏற்படுத்துகிறது.