Home One Line P1 ரப்பிட் நிறுவனம் சொந்த முடிவுகளை எடுக்கக்கூடாது!- இஸ்மாயில் சப்ரி

ரப்பிட் நிறுவனம் சொந்த முடிவுகளை எடுக்கக்கூடாது!- இஸ்மாயில் சப்ரி

445
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ரப்பிட் இரயில் நிறுவனம் நாளை முதல் கூடல் இடைவெளியை அமல்படுத்தப் போவதில்லை என்ற கூற்றுக்கு தற்காப்பு அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள நிர்வாக நடைமுறைகளுக்கு ஏற்றவாறு அனைத்து செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் ரப்பிட் நிறுவனம் தங்களுக்குச் சொந்தமான நடைமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அரசாங்கத்திடம் அனுமதி கோராமல் அவர்கள் தங்களுக்கான சொந்த முடிவு எடுப்பது தவறாகும். எங்களிடம் அனுமதி கேட்கப்படவில்லை. இது குறித்து நாங்கள் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.” என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

இதனிடையே, முன்னதாக கூடல் இடைவெளி இரயில் பெட்டிகளில் மற்றும் இரயில் நிலையங்களில் அமல்படுத்தப்படுத்தப்படாது என்று தெரிவித்த ரப்பிட் நிறுவனம், தற்போது அரசாங்கம் பரிந்துரைத்துள்ள நடைமுறைகளை கடைப்பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

“இது குறித்து அரசாங்கம் அடுத்த அறிவிப்புகளை செய்யும் வரையில் முன்னதாக அமல்படுத்தப்பட்ட நடைமுறைகள் தொடர்ந்து அனுசரிக்கப்படும். நாளை (ஜுன் 10) வேலைக்கு திரும்பும் மக்கள், சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள நடைமுறைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று அது தெரிவித்தது.

நாளை முதல் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்றபடியால் மக்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது

முன்னதாக, இரயில் பெட்டிகளில் மற்றும் இரயில் நிலையங்கள் கூடல் இடைவெளிகள் இனி அனுசரிக்கப்படாது என்று அந்நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்திருந்தது.