Home One Line P2 கொவிட்19: இரண்டாம் நாளாக புதிதாக 7 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: இரண்டாம் நாளாக புதிதாக 7 சம்பவங்கள் பதிவு

723
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய கொவிட்19 பாதிப்புகள் 7 மட்டுமே அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,336-ஆக உயர்ந்தது.

தனது அன்றாட பத்திரிகையாளர் சந்திப்பில் நூர் ஹிஷாம் இந்த விவரங்களை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 பாதிப்பால் மரணங்கள் ஏதும் நிகழவில்லை. இதைத் தொடர்ந்து நாட்டின் மரண எண்ணிக்கை 117- ஆக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 7 பாதிப்புகளில், 6 சம்பவங்கள் இறக்குமதி சம்பவங்கள். ஒருவர் உள்ளூரில் தொற்றுக் கண்ட வெளிநாட்டினர்.

இன்று 281 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,975-ஆக உயர்ந்தது.

1,244 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒருவர் மட்டுமே சுவாசக் கருவி மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்.