Home One Line P2 கொவிட்19: உலகளவில் இறப்பு விகிதம் 408,000-ஐ எட்டியது

கொவிட்19: உலகளவில் இறப்பு விகிதம் 408,000-ஐ எட்டியது

543
0
SHARE
Ad

வாஷிங்டன்: பிரேசில் மற்றும் இந்தியாவில் தினசரி இறப்பு விகிதம் அதிகரித்திருப்பது உலகளாவிய ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையை 408,000- ஆக உயர்த்தியது.

உலகளவில் கொவிட்-19 இன் இறப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது, 24 மணி நேரத்திற்குள் 4,000- க்கும் மேற்பட்டவர்கள் மரணமுற்றுள்ளனர்.

பிரேசில் மற்றும் இந்தியாவில் தினசரி இறப்பு விகிதம் அதிகரித்திருப்பது உலகளாவிய ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையை 408,000- ஆக உயர்த்தியது.

#TamilSchoolmychoice

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள்படி 111,000 சம்பவங்களுடன் மிக அதிகமான இறப்பு விகிதத்தை அமெரிக்கா கொண்டுள்ளதைக் காட்டுகிறது.

பிரிட்டனில் மொத்தமாக 40,968 சம்பவங்கள் பதிவாகி மிக உயர்ந்த இறப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.

பிரேசிலில் கொவிட்-19 தொற்றினால் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 37,000-ஐ தொட்டுள்ளது.
இத்தாலியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34,000 ஆகும்.

இதற்கிடையில், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் முறையே 29,000 இறப்புகளையும் 27,000 வழக்குகளையும் பதிவு செய்துள்ளன.

மற்ற நாடுகளில் இன்னும் 14,000- க்கும் குறைவான சம்பவங்கள் உள்ளன.

அதே நேரத்தில், 3.35 மில்லியன் நோயாளிகள் உலகலவில் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.