Home One Line P1 கொவிட்19: புதிதாக 2 சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்

கொவிட்19: புதிதாக 2 சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்

526
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய கொவிட்19 பாதிப்புகள் 2 மட்டுமே அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,338-ஆக உயர்ந்தது.

ஒருவர் இன்று மரணமுற்ற நிலையில், நாட்டின் மரண எண்ணிக்கை 118- ஆக உயர்வு கண்டது.

#TamilSchoolmychoice

புதிதாக அடையாளம் காணப்பட்ட 2 பாதிப்புகளில், ஒரு சம்பவம் இறக்குமதி சம்பவமாகும். ஒருவர் உள்ளூரில் தொற்றுக் கண்ட வெளிநாட்டவர்.

இன்று 39 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,014-ஆக உயர்ந்தது.

1,206 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.