Home One Line P1 1எம்டிபி: பறிமுதல் செய்யப்பட்ட மில்லியன் டாலர் மதிப்புள்ள கைப்பைகள் சேதப்படுத்தப்பட்டன!

1எம்டிபி: பறிமுதல் செய்யப்பட்ட மில்லியன் டாலர் மதிப்புள்ள கைப்பைகள் சேதப்படுத்தப்பட்டன!

667
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி ஊழலில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும், காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட மில்லியன் கணக்கான ரிங்கிட் கைப்பை, பொருட்களைக் கையாள்வதில் அலட்சியம் காரணமாக சேதமடைந்ததாக உயர்நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா கூறுகையில், தேசிய வங்கியில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை ஆய்வு செய்யும் போது கைப்பைகளின் நிலை குறித்து தங்களுக்குத் தெரிய வந்ததாகக் கூறினார்.

“விலை உயர்ந்ததாகக் கூறப்படும் ஒவ்வொரு பணப்பையும் புறக்கணிக்கப்பட்டன. அது காவல்துறையினரால் சேதப்படுத்தப்பட்டது. அவர்கள் காகிதத்திற்கு பதிலாக பேனாவை நேரடியாக பைகளின் மீது எழுதினர்.”

#TamilSchoolmychoice

“இந்த பைகள் மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புடையவை. இதுதான் அவர்கள் அவற்றை கையாளும் விதம்.” என்று அவர் நீதிபதி டத்தோ ஜாமில் ஹுசின் முன் கூறினார்.