Home One Line P1 கொவிட்19: புதிதாக 31 சம்பவங்கள் பதிவு- ஒருவர் மலேசியர்

கொவிட்19: புதிதாக 31 சம்பவங்கள் பதிவு- ஒருவர் மலேசியர்

505
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,369-ஆக உயர்ந்தது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 31 பாதிப்புகளில், 11 சம்பவங்கள் இறக்குமதி சம்பவமாகும். 19 பேர் உள்ளூரில் தொற்று கண்ட வெளிநாட்டினர். ஒருவர் மலேசியர்.

#TamilSchoolmychoice

இன்று 51 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,065-ஆக உயர்ந்தது.

1,186 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.