காவல் துறையின் புலனாய்வு பிரிவு (42 படை) தெரு கும்பல் நடவடிக்கைகளைத் தடுப்பது உள்ளிட்ட நிலைமையைக் கண்காணிக்கும் என்று புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை இயக்குனர் டத்தோ அஜிஸ்மான் அலியாஸ் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போலவே சட்ட நடவடிக்கைகளும் குற்றவாளிகளுக்கு எதிராக விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
“அவர்கள் வேகம், பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களைச் செய்தால், அவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவார்கள்.” என்று அவர் கூறினார்.