Home One Line P1 500 தேவாலயங்கள் மீண்டும் திறப்பதற்கு விண்ணப்பித்துள்ளன

500 தேவாலயங்கள் மீண்டும் திறப்பதற்கு விண்ணப்பித்துள்ளன

494
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கட்டத்தில் மலேசியா நுழைந்த வேளையில், ​​சுமார் 500 கிறிஸ்தவ தேவாலயங்கள் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் மூடப்பட்ட பின்னர் மீண்டும் திறக்க விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் பச்சை மண்டலங்களில் அமைந்துள்ள தேவாலயங்கள், ஜூன் 6-ஆம் தேதி தேசிய ஒற்றுமை அமைச்சகத்திற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், சுகாதார அமைச்சின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தேவையான தரமானநிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுடன் திறக்க நாங்கள் தயாராக இருப்பதால் அமைச்சகம் இதை விரைவுபடுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். ” என்று மலேசிய தேவாலய மன்ற பொதுச்செயலாளர் ரெவ் ஹெர்மன் சாஸ்திரி கூறினார்.

#TamilSchoolmychoice

“இது ஒவ்வொரு நாளும் வழிபடும் தேவாலயங்களுக்கானது.

“அவர்கள் (அரசாங்கம்) இதனை சரிபார்க்க வேண்டும். பேரங்காடிகள், உணவகங்கள் மற்றும் பொது போக்குவரத்து போன்ற பிற துறைகளை அனுமதிக்கப்பட்டுள்ளன. ” என்று ஹெர்மன் கூறினார்.