இத்தொற்று பரவுவதற்கு 14 நாட்கள் எடுக்கும் கால அளவை பொறுத்து இது செய்யப்படும் என்று சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இதேபோன்ற கண்காணிப்பும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஒவ்வொரு தொற்றுப் குழுவிற்கும் நடத்தப்பட்டது என்றும், இதே கால அளவீடு கையாளப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். அத்தொற்றுக் குழுக்களிலிருந்து எந்தவொரு தொற்று சம்பவங்களும் பரவாமல் இருந்தால், அத்தொற்றுக் குழுவின் பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று நிலவரப்படி நாட்டில் 31 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 11 சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்களாகும். 19 பேர் உள்நாட்டில் தொற்றுக் கண்ட வெளிநாட்டினர் ஆவர். மலேசிய ஒருவர் மட்டுமே பாதிப்புள்ளானார்.