Home One Line P2 கொவிட்-19 : தமிழகத்தில் ஒரே நாளில் 1,989 பேருக்கு தொற்று; 30 பேர் உயிரிழப்பு

கொவிட்-19 : தமிழகத்தில் ஒரே நாளில் 1,989 பேருக்கு தொற்று; 30 பேர் உயிரிழப்பு

640
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 13) ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 30 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த தொற்று உயர்வு பல்வேறு கண்டனக்கணைகளை பொதுமக்களிடையே தோற்றுவித்துள்ளது.

தமிழக அரசும் உடனடி நடவடிக்கையாக இதுவரையில் சுகாதாரத் துறை செயலாளராக செயல்பட்டு வந்த பீலா ரமேஷை மாற்றியுள்ளது. அவருக்குப் பதிலாக சுகாதாரத் துறையின் சிறப்பு அதிகாரியாகச் செயல்பட்டு வந்த இராதாகிருஷ்ணன் என்பவரை நியமித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இன்றைய பாதிப்புகளைத் தொடர்ந்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 42,687 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 397 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதில் 33 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

அதே வேளையில் ஒரே நாளில் 1,362 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,409 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 18,878 பேர் சிகிச்சையில் உள்ளனர்.