Home One Line P1 பேட்ரிக் தியோ நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்

பேட்ரிக் தியோ நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்

626
0
SHARE
Ad

ஜோகூர் பாரு:  நடிகரும் வானொலி, தொலைக்காட்சி தொகுப்பாளருமான பேட்ரிக் தியோ இன்று ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள நீதிமன்றம் ஒன்றில் குற்றம் சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் மற்றும் ஜோகூர் அரச குடும்பத்தை அவமதிக்கும் நோக்கில் அறிக்கையை வெளியிட்டதன் தொடர்பான விசாரணைக்கு உதவ நடிகரும் வானொலி தொகுப்பாளருமான பேட்ரிக் தியோ அண்மையில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

73 வயதான தியோ, பெட்டாலிங் ஜெயா காவல் துறை தலைமையகத்தில், ஜோகூர் காவல் துறை தலைமையகத்தின் வணிக குற்றவியல் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

தியோ துங்கு இஸ்மாயிலை அவமதித்து முகநூல் பக்கத்தில் ஒரு மோசமான அறிக்கை பதிவிட்டதாக பொதுமக்களிடமிருந்து ஜோகூர் காவல் துறையினருக்கு புகார் அறிக்கை கிடைத்தது. அதைத் தொடர்ந்து தியோ கடந்த மே 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மே 14 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

தொடர்பு, பல்ஊடக சட்டத்தின் 233-வது பிரிவின் கீழ் பேட்ரிக் தியோ விசாரிக்கப்பட்டார். இணையத் தொடர்பு வசதிகளை தவறான முறையில் பயன்படுத்துவர்களுக்கு எதிராக இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது ஒரு வருடம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

பேட்ரிக் தியோ ஜோகூர் இளவரசரின் காணொளி ஒன்றைத் தனது முகநூலில் பதிவிட்டு அதன் தொடர்பில் சில தரக் குறைவான வாசகங்களைப் பதிவிட்டதாக அவர் மீது புகார் செய்யப்பட்டிருந்தது.