Home One Line P2 ரம்யா கிருஷ்ணன் காரில் 96 மதுப்புட்டிகள் – சோதனையில் பறிமுதல்

ரம்யா கிருஷ்ணன் காரில் 96 மதுப்புட்டிகள் – சோதனையில் பறிமுதல்

1070
0
SHARE
Ad

சென்னை – கடந்த வியாழக்கிழமை (ஜூன் 11) மகாபலிபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த வாகனங்களைப் பரிசோதனை செய்தபோது நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரில் 96 மதுப்புட்டிகள் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

பாகுபலி படங்களில் நடித்ததன் மூலமும் பல தமிழ், தெலுங்கு கதாநாயகியாக நடித்ததன் மூலமும் புகழ் பெற்றவர் ரம்யா கிருஷ்ணன்.

இதனைத் தொடர்ந்து ரம்யா கிருஷ்ணனின் கார் ஓட்டுநர் செல்வகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

ரம்யாவின் கார் பரிசோதனை செய்யப்பட்டபோது அவரும் காரில் இருந்தார் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.

ஈசிஆர் நெடுஞ்சாலை எனப்படும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முத்துக்காடு என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகன பரிசோதனை முகப்பிடத்தில் ரம்யா கிருஷ்ணனின் கார் பரிசோதிக்கப்பட்டது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் மதுப் புட்டிகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் அந்த மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.

ரம்யா கிருஷ்ணன் தரப்பில் இதுவரையில் அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.