Home நாடு ‘ஆபாச’ காணொளி அம்னோவின் சதி வேலை – முஸ்தபா அலியின் வழக்கறிஞர் கூறுகிறார்

‘ஆபாச’ காணொளி அம்னோவின் சதி வேலை – முஸ்தபா அலியின் வழக்கறிஞர் கூறுகிறார்

669
0
SHARE
Ad

200x254x4a89c30dca97fd6eea9f232524d7f33c.jpg.pagespeed.ic.Bi4MQZLJcvபேராக், ஏப்ரல் 12 – நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு, தற்போது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, அந்த ஆபாச காணொளியில் இருக்கும் பாஸ் கட்சியின் முக்கியத் தலைவர் முஸ்தபா அலி என்று பரவலாகக் கருத்து நிலவுகிறது.

ஆனால், பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளரான முஸ்தபா அலி, அந்த ஆபாச காணொளியில் இருப்பது தான் அல்ல என்று உறுதியாக மறுத்துள்ளார்.

அதோடு, இவ்விவகாரம் பற்றி இனி தான் பேசப் போவதில்லை என்றும், எதுவாக இருந்தாலும் தனது வழக்கறிஞர் அஸ்முனி அவியை தொடர்பு கொள்ளும் படியும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து அஸ்முனி அவி (படம்) செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“அந்த காணொளியில் இருக்கும் நபர் தான் அல்ல என்று முஸ்தபா அலி மறுத்துள்ளார். இது அம்னோ கட்சியினரின் திட்டமிட்ட சதி வேலை என்பதில் சிறு சந்தேகம் கூட இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வலைப்பதிவில் அந்த காணொளியை வெளியிட்டவர் யார் என்று தெரியும் பட்சத்தில் அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.