Home One Line P2 இந்தியாவில் 24 மணி நேரத்தில் 11,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 11,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

501
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பின் எண்ணிக்கையானது 332,424- ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 153,106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 169,798 பேர் குணமடைந்துள்ளனர். 9,520 பேர் உயிரிழந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 11,502 பேர் இத்தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 325 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை 5,774,133 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 115,519 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.