Home One Line P1 வெளிநாடுகளிலிருந்து வீடு திரும்புபவர்கள் அங்கேயே பரிசோதனை செய்து வருவது நல்லது

வெளிநாடுகளிலிருந்து வீடு திரும்புபவர்கள் அங்கேயே பரிசோதனை செய்து வருவது நல்லது

533
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடு திரும்புவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் கொவிட் -19 பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்களுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்ய நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதே இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.

“ஒரே நாளில் அவர்கள் பரிசோதனையின் முடிவைப் பெற முடியாவிட்டால், அவர்கள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

#TamilSchoolmychoice

“எனவே, மாற்றாக, வீட்டிற்கு வர விரும்பும் மற்றும் விமான நிலையத்தில் அதிக நேரம் காத்திருக்க விரும்பாத மலேசிய குடிமக்கள் வீடு திரும்புவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

எவ்வாறாயினும், வெளிநாட்டில் பரிசோதனை எடுத்தவர்கள், அவர்களின் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையானவை என்பதை சரிபார்க்கும் சான்றிதழைப் பெற வேண்டும் என்றும் நிர்ணையிக்கப்பட்ட நடைமுறைக்கு கட்டுப்பட்டு, மைசெஜ்தெரா பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.