Home நாடு ஆபாச வீடியோ குறித்து காவல்துறை விசாரணை மேற்கொள்ளும்

ஆபாச வீடியோ குறித்து காவல்துறை விசாரணை மேற்கொள்ளும்

811
0
SHARE
Ad

Mustapha-Ali-Slider-2கோலாலம்பூர், ஏப்ரல் 13- இணையத்தளத்தில் உலவி வரும் ஆபாச வீடியோ குறித்து  மலேசிய பல்லூடக தொடர்பு துறையுடன் இணைந்து காவல்துறை விசாரணை மேற்கொள்ளும்.

காவல்துறை தலைவர் அலுவலகத்தைச் சேர்ந்த ஏசிபி ரம்லி முகமட் யூசோப் இந்த  ஆபாச வீடியோ குறித்து விசாரணை நடக்கும் என்றும் குற்றவியல் சட்டம் 292 (A) பிரிவின் கீழ் இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

திரெங்கானு, கம்போங் அலோர் லிந்தாங் பகுதியில் உள்ள பல வீடுகளின் முன் இந்த ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் போடப்பட்டிருந்ததாகவும், காவல்துறையினர் அதனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் சொன்னார். மேலும் பொதுமக்களிடம் இருந்து புகார்களை  பெற்று வருவதையும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இந்த ஆபாச வீடியோ, புகைப்படங்கள் யாராவது வைத்திருந்தாலோ, அல்லது எங்கிருந்தாவது பெற்றாலோ உடனே அருகாமையிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அவ்வாறு யாராவது அந்த ஆபாச வீடியோ, புகைப்படங்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவர் என்றும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏசிபி ரம்லி முகமட் யூசோப் தெரிவித்தார்.