Home அரசியல் “நான் அவன் இல்லை” – முஸ்தபா அலி

“நான் அவன் இல்லை” – முஸ்தபா அலி

528
0
SHARE
Ad

Mustapha-Ali-featureபெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 13- அந்த ஆபாச வீடியோ காட்சியில் இருப்பது தான் அல்ல என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முஸ்தபா அலி (படம்)  விளக்கமளித்துள்ளார்.

இந்த ஆபாச வீடியோ விவகாரத்தில் யாரையும் சந்தேகப்படவில்லை என்றும், ஆனால் இது அம்னோ வேலைதான் என்றும் அவர் கூறினார்.

இந்த ஆபாச வீடியோ விவகாரத்தை தன்னுடைய வழக்கறிஞர் நிறுவனமான அவி & கோ  கவனித்து கொள்ளும் என்றும் முஸ்தபா அலி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் இந்த ஆபாச வீடியோ காட்சி இணையத்தளத்தில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் உள்ளது பாஸ் தலைவர் அல்ல என்றும் அதனால் பாஸ் கட்சி எந்த வித கூட்டத்தையும் கூட்டி இந்த விவகாரம் பற்றி விவாதிக்கப் போவதில்லை என்றும் பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் ஹாடி அவாங் கூறியிருக்கின்றார்.