சிரம்பான்: நெகிரி செம்பிலானில் உள்ள ரெம்பாவ் இப்போது நாட்டின் ஒரே சிவப்பு மண்டலமாக உள்ளது. அங்கு இன்னும் 44 சம்பவங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சின் விளக்கப்படம் காட்டுகிறது.
சிவப்பு மண்டலம் என்பது 40- க்கும் மேற்பட்ட கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட மாவட்டமாகும்.
நெகிரி செம்பிலான் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்களைக் கொண்ட மாநிலமாக அதாவது 49 சம்பவங்கள், சிலாங்கூர் (30), கோலாலம்பூர் (29) ஆகியவையும் வரிசையில் உள்ளன.
இதற்கிடையில் பினாங்கு, கெடா, பெர்லிஸ், மற்றும் கிளந்தான் ஆகியவை பச்சை மாநிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இன்றுவரை, நாட்டில் மொத்தம் 8,572 கொவிட்19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா முன்னதாக தெரிவித்திருந்தார்.
மொத்தமாக சுமார் 8,156 பேர் இந்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 295 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர்களின் எண்ணிக்கை மாறாமல் 121- ஆக உள்ளது.