Home One Line P1 கொவிட்19: சிவப்பு மண்டலமான ரெம்பாவில் சம்பவங்கள் அதிகரிப்பு

கொவிட்19: சிவப்பு மண்டலமான ரெம்பாவில் சம்பவங்கள் அதிகரிப்பு

467
0
SHARE
Ad

சிரம்பான்: நெகிரி செம்பிலானில் உள்ள சிவப்பு மண்டல மாவட்டமான ரெம்பாவில் மேலும் 12 கொவிட் 19 சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

நேற்றைய நிலவரப்படி, சுகாதார அமைச்சின் விளக்கப்படம் அங்கு 44 சம்பவங்கள் இருப்பதாகக் கூறியிருந்தது. தற்போது, 56 சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக அது புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

இப்பகுதியில் நேர்மறையான நிகழ்வுகளின் அதிகரிப்பு, பெடாஸ் தொற்று குழுவுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இப்பகுதியில் பல தொடர்ச்சியான பரிசோதனைகளைத் தொடர்ந்து கிடைக்கப்பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

சிவப்பு மண்டலம் என்பது 40- க்கும் மேற்பட்ட கொவிட் 19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட மாவட்டமாகும்.

நெகிரி செம்பிலானில் 61 சம்பவங்கள் இப்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிலாங்கூரில் (29), கோலாலம்பூர் (28).

இதற்கிடையில் , பேராக் மற்றும் ஜோகூரில் ஒரு நபர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இன்றுவரை, நாட்டில் மொத்தம் 8,587 கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சுமார் 8,177 பேர் குணமடைந்துள்ளனர், 289 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.