Home One Line P2 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கொவிட்-19 தொற்றுக் காரணமாக உயிரிழப்பு

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கொவிட்-19 தொற்றுக் காரணமாக உயிரிழப்பு

889
0
SHARE
Ad

புது டில்லி: மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாமோனாஷ் கோஷ் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

அவர் கொவிட்-19 பாதிப்புக்காரணமாக உயிர் இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் அவருக்கு கொவிட்-19 பாதிப்புக்கு ஆளாகினார்.

இந்த சம்பவம் தமக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக, அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

” 35 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் இருந்த அவர், மக்களுக்காகவும், கட்சிக்காவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளார். அவர் தனது சமூக பணி மூலம் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளார்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், தமிழகத்தைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொவிட்-19 பாதிப்புக் காரணமாக ஜூன் 10 உயிரிழந்தார்.

சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரான அவருக்கு கொரொனா தொற்று பீடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே கல்லீரல் பிரச்சனையால் வெளிநாட்டுக்கு சென்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் அன்பழகன்.