Home One Line P1 போதைப்பொருள் உட்கொண்ட வழக்கில் முகமட் சாபு மகனுக்கு 8 மாதம் சிறை

போதைப்பொருள் உட்கொண்ட வழக்கில் முகமட் சாபு மகனுக்கு 8 மாதம் சிறை

514
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் தற்காப்பு அமைச்சர் முகமட் சாபுவின் மகன் கடந்த ஆண்டு ஒரு முக்கிய தங்கும் விடுதியில் போதைப்பொருள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் அவருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் முடிவில் ஒரு நியாயமான சந்தேகத்தை எழுப்புவதில் பாதுகாப்பு தரப்பு தவறிவிட்டதை அடுத்து நீதிபதி முகமட் ஐசாத் அப்துல் ரகீம், 32 வயதான அகமட் சைபுல் இஸ்லாம் முகமட் என்பவருக்கு இந்த தண்டனையை விதித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு இன்று முதல் தண்டனையை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அகமட் சைபுல் இஸ்லாமை சிறைத்தண்டனைக்கு பின்னர் தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் மேற்பார்வையில் இரண்டு ஆண்டுகள் இருக்க உத்தரவிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு காவல்துறையின் பரிசோதனை நடவடிக்கைகளின்போது முகமட் சாபுவின் மகன் அகமட் சைபுல் இஸ்லாம் முகமட் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் போதைப் பொருள் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி அம்பாங் வட்டாரத்தில் தலைநகர் டாங் வாங்கி காவல் நிலையத்தைச் சேர்ந்த போதைப் பொருள் மற்றும் குண்டர் கும்பல்களுக்கு எதிராக டி-7 (D7) பிரிவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்போது அகமட் சைபுல் பரிசோதிக்கப்பட்டார்.

ஏறத்தாழ 101 நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் அகமட் சைபுல் மாரிஜூவானா என்ற போதைப் பொருள் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.