Home One Line P1 ஒருமித்த கருத்துடன் சிலாங்கூர் சட்டமன்ற துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்

ஒருமித்த கருத்துடன் சிலாங்கூர் சட்டமன்ற துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்

523
0
SHARE
Ad

ஷா அலாம்ஷா அலாம்: சிலாங்கூர் மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் இடத்தை நிரப்ப நம்பிக்கைக் கூட்டணி கட்சிகள் பொருத்தமான வேட்பாளரைத் தேடுகிறது என்று சிலாங்கூர் மந்திரி பெசார் மற்றும் நம்பிக்கைக் கூட்டணி மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

ஜூன் 13 அன்று பிகேஆரை விட்டு வெளியேறிய டாக்டர் டரோயா அல்வி பதவி விலகியதைத் தொடர்ந்து இந்த பதவியை நிரப்ப பிகேஆர், ஜசெக மற்றும் அமானா இடையே கூட்டணி ஒருமித்த முடிவை எடுக்கும் என்று அவர் கூறினார்.

“ஆம், டாக்டர் டரோயா ஜூன் 16 அன்று பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். நாங்கள் அடுத்த வேட்பாளரைத் தேடுவோம்.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் சட்டமன்றம் ஜூலை 13-ஆம் தேதி நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

கிளை, மாநிலம் மற்றும் மத்திய மட்டங்களில் உள்ள 35 தலைவர்களுடன் டாக்டர் டரோயா கட்சியை விட்டு வெளியேறியதன் தாக்கம் குறித்து கருத்து தெரிவித்த சிலாங்கூர் பிகேஆர் தலைமைக் குழுவின் தலைவரான அமிருடின், இந்த நடவடிக்கை பிகேஆரை பாதிக்கவில்லை என்று கூறினார்.

“டாக்டர் டரோயாவின் நடவடிக்கைகள் சிறிய சிற்றலைகளாகக் கருதப்படலாம். இரண்டு துணைத் தலைவர்கள் மற்றும் பெண் தலைவர்கள் வெளியேறிவிட்டனர், ஆனால் நாங்கள் இன்னும் போராடுகிறோம்.” என்று அவர் கூறினார். .

முன்னதாக, பிகேஆர் மத்திய துணைத் தலைவரான டாக்டர் டரோயா தனது பதவி விலகலை அறிவித்து தன்னை தேசிய கூட்டணி நட்பு சட்டமன்ற உறுப்பினராக அறிவித்தார்.