கோலாலம்பூர்- ஜூலை மாதம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரைக் குறித்து செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் அடுத்த மாதம் நாடாளுமன்றத்திற்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப், பத்திரிகையாளர்கள் திரும்பி வரும்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்று சின் சியூ நாளிதழ் தெரிவித்துள்ளது.
“நாடாளுமன்ற அமர்வு குறித்து செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி உண்டு, ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.
“பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் தங்கள் சொந்த செலவில் கொவிட் 19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும் முழு நாடாளுமன்றத்திலும் முகக்கவசங்களை அணிய வேண்டும்.” என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு ஊடகமும் ஒரு பத்திரிகையாளர் மற்றும் ஒரு புகைப்படக்காரரை அனுப்புவதற்குக் கட்டுப்படுத்தப்படும் என்று முகமட் அரிப் மேலும் கூறினார்.
மேலும், ஊடகவியலாளர்கள் ஊடக அறையில் வைக்கப்படுவார்கள். நாடாளுமன்ற நடைபாதையில் நேர்காணல் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.