Home One Line P1 வெளிநாட்டினர் கடத்தலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை

வெளிநாட்டினர் கடத்தலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை

446
0
SHARE
Ad

கோலாலம்பூர்- வெளிநாட்டினர் கடத்தல் கும்பலுடன் இணைந்து செயல்படும் அல்லது இடைத்தரகர்களாகவோ காணப்படும் எந்தவொரு அதிகாரியையும் அதன் உறுப்பினர்களையும் குடிநுழைவுத் துறை சமரசம் செய்து பாதுகாக்காது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக அவர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என்று அதன் தலைவர் டத்தோ கைருல் டிசைமி டாவுட் கூறினார்.

“குடிநுழைவுத் துறை எப்போதுமே மலேசிய காவல் துறை மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் இணைந்து அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.” என்று இன்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஜோகூரில் நேற்று மூன்று குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டது குறித்து வினவிய போது அவர் இதைக் கூறினார்.

காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பை தருவதாக கைருல் டிசைமி கூறினார். மேலும் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நாட்டின் நுழைவாயிலைக் கட்டுப்படுத்துவதற்கும் வெளிநாட்டினர் விவகாரங்களை நிர்வகிப்பதற்கும் பொறுப்பான ஒரு துறை என்ற வகையில், ஒவ்வொரு அதிகாரியும் குடிநுழைவு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் .” என்று அவர் கூறினார்.