புது டில்லி: இந்தியாவில் கொவிட்19 பாதிப்பினால், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 16,992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தமாக நாட்டில் 4.73 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
முதல்முறையாக ஒரே நாளில் 16,000- க்கும் அதிகமானோர் கொவிட்19 நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் ஒரே நாளில் 15,968 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறாக ஒவ்வொரு நாளும் இந்தியாவில் கொவிட்19 தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அச்சம் கொள்கின்றனர்.
மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் கிட்டதட்ட 2.7 இலட்சம் பேர் இந்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதனால், குணமடைபவர்களின் விகிதமானது 57.42- ஆக அதிகரித்துள்ளது. இதுவரையிலும் 14,894 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 418 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.