Home One Line P2 மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020 – பாடல் திறன் போட்டி

மின்னலின் மின்னும் நட்சத்திரம் 2020 – பாடல் திறன் போட்டி

821
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இளைஞர்களுக்கான பாடல் திறன் போட்டியை மின்னல் எப் எம் ஏற்பாடு செய்துள்ளது. நன்கு பாடும் ஆற்றல் உங்களிடம் உள்ளதா? உங்களுக்குள் இருக்கும் பாடும் திறனை வெளிக் கொணர ஒர் அற்புதமான வாய்ப்பு இதுவாகும். ஆக, பாடுங்கள், இந்தப் போட்டியில் வெற்றி பெறுங்கள்.

போட்டி சில விதிமுறைகளுக்கு உட்பட்டது. அவை பின்வருமாறு:

1. போட்டியாளர்கள் மலேசியர்களாய் இருத்தல் அவசியம்.

#TamilSchoolmychoice

2. போட்டியாளர்களின் வயது 16 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

3. தமிழ், மலாய் ஆகிய இரு மொழிகளில் பாடல்களைப் பாடி, உங்களுடைய காணொளியை Instagram-இல் #minnalstar2020 என பதிவு செய்து ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

4. உங்களுடைய தேர்வுப்பாடல்கள் சினிமா அல்லது உள்ளூர் பாடல்களாக இருக்கலாம்.

5. நீங்கள் பதிவு செய்யும் காணொளியில் பெயர், வயது, வசிப்பிடம் போன்ற விபரங்களை அவசியம் குறிப்பிட வேண்டும்.

6. உங்கள் காணொளி இரண்டு நிமிடங்களுக்குள் இருப்பது அவசியம்.

7. சொந்த ஆல்பம் அல்லது ‘சிங்கல்ஸ்’ செய்தவர்கள் இப்போட்டியில் கலந்துக் கொள்ள முடியாது.

8. நீதிபதிகளின் முடிவே இறுதியானது.

9. தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களை மட்டுமே மின்னல் எப்எம் தொடர்பு கொள்ளும்.

10. மேல் விவரங்களுக்கு மின்னல் எப் எம் சமூக வலைத் தளங்களை நாடலாம் அல்லது அலுவலக நேரத்தில் 03-22887497 / 03-22887793 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மின்னலின் மின்னும் நட்சத்திரமாக நீங்களும் ஜொலிக்கலாம். வாய்ப்பை நழுவ விட வேண்டாம். இப்பொழுதே நீங்கள் பாடி காணொளியை அனுப்பி வையுங்கள்.